search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் பிறந்தநாள்"

    • விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக இரவு 12 மணிக்கு வீடியோ வெளியீடு.
    • விஜய்யை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி காட்சிகளை சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது.

    இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டு விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களால் ஆங்காங்கே கொண்டாட்டங்களும் கலைகட்டி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக இரவு 12 மணிக்கு 3டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    லியோ படத்தின் ப்ரோமோ காட்சியை மையமாக வைத்து இந்த 3 டி வீடியோவை உருவாக்கி இருக்கிறார் கிராபிக் டிசைனரான மேடி மாதவன் என்பவர்.

    விஜய்யை தத்ரூபமாக 3டி அனிமேஷனில் உருவாக்கி காட்சிகளை சினிமா காட்சிகளுக்கு ஈடாக தயாரித்துள்ளார்.

    இந்த வீடியோவை மேடி மாதவன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.. இது உங்களுக்காக" என்ற பதிவுடன் பகிர்ந்துள்ளார். ஃபேன் மேட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள்.
    • பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது.

    புதுச்சேரி:

    ரசிர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி புதுவையில் வாழ்த்து சுவரொட்டிகள், பல்வேறு விதமான பேனர்கள் வைப்பது வழக்கம். நடுக்கடலில் பேனர், ஆழ்கடல் நீரினுள் பேனர் என ரசிகர்கள் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

    தற்போது புதிய பஸ் நிலையம் அருகே வைத்துள்ள பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது போல் அமைத்துள்ளனர். மைக் போடியம் ஸ்டாண்டில் ச.ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனரை உருளையன்பேட்டையை சேர்ந்த ஆளப்பிறந்தவன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ளனர்.

    பேனரில் 2026-ல் சட்டமன்றத்தில் உங்களின் குரல் "தமிழக மக்களின் உரிமை குரல்"என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதோடு ரசிகர்கள் மேக்கிங் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

    பின்னால் பின்னணி குரலில் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும்? என கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என பல குரல்கள் எழுப்பும் வகையில் ஆடியோ பதிவிடப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    • கொங்கு மெயின் ரோட்டில் சுமார் 2000 நபர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது.
    • சிவ சார்மிளா அறக்கட்டளை ஆசிரமத்திற்கு காலை உணவும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி திருப்பூர் ஒன்றிய இளைஞரணி சார்பாக பல்வேறு பகுதிகளில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் ஜி .கே. சங்கர் தலைமையில், திருப்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சுகுமார் ஏற்பாட்டில் ஊத்துக்குளி தேனீஸ்வரர் பாளையம் பகுதியில் ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மற்றும் சிவ சார்மிளா அறக்கட்டளை ஆசிரமத்திற்கு காலை உணவும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

    கொங்கு மெயின் ரோட்டில் சுமார் 2000 நபர்களுக்கு மதிய அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட பொருளாளர் ராம்குமார், மாவட்ட ஆலோசகர் மாதேவன், அவினாசி ஒன்றிய தலைவர் கனகராஜ், மேற்கு மாநகரத் இளைஞர் அணி தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி காளிமுத்து, மேற்கு மாநகர தொழில் நுட்ப அணி தலைவர் கௌதம் மற்றும் ஒன்றிய செயலாளர் கோல்டு பாண்டி ,திருப்பூர் ஒன்றிய இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் ,ஒன்றிய கௌரவத் தலைவர் தினேஷ் ,கௌரவ ஆலோசகர் வசந்த் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ்குமார், கௌரி பிரகாஷ், லோகு, மருது ஈஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • 500 பேருக்கு அன்னதானம் மற்றும் மாணவஇ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது
    • தளபதி விஜய் தொழிலாளர் அணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் :

    நடிகர் விஜய் பிறந்தநாள் விழா மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆலோசனையின்படி திருப்பூர் மாவட்ட தளபதி விஜய் தொழிலாளர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜ்குமார், துணைச் செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் சதீஷ், அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அங்கேரிபாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு500 பேருக்கு அன்னதானம்மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், முதியவர்களுக்கு இலவச வேட்டி சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தொழிலாளர் அணி செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

    விழாவில் குமார், முத்து, சரவணன், வினோத், பிரசாத், தினேஷ் ,வெங்கடேஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×