என் மலர்

  சினிமா

  சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்
  X

  சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னரே விஜய் ரசிகர்கள் விஜய்க்கு போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். #HBDThalapathy
  நாளை மறுநாள் (ஜூலை 22-ஆம் தேதி) நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். 

  விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, விஜய் 62 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

  இந்த அறிவிப்பு வெளியாகியது முதலே அதற்கான கொண்டாட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் விஜய் பிறந்தநாளுக்கும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.   விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு வகையான போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். 

  அந்த போஸ்டர்களில், ` விவசாயிகளின் தமிழ்மகனே தமிழ்நாட்டை ஆள வருக..., சாமானியர்களின் சாமியே! உங்களதான் நம்புது இந்த பூமியே!!. 2021 சட்டமன்றத்தில் உங்கள் குரல் தமிழக மக்களின் உரிமைக்குரல் என்றும், விஜய்யை தெய்வம் என்றும் பல்வேறு போஸ்டர்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன. #HappyBirthdayThalapathy #HBDThalapathy #VijayBirthday #Vijay62

  Next Story
  ×