என் மலர்
நீங்கள் தேடியது "Vivek Lyricist"
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் ஒரு கெட்அப் வைரலாகி வருகிறது. #Sarkar #VIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது. யோகி பாபுவை கிள்ளும் அந்த நபர் யார் என்று கண்டுபிடிங்கள் என்று அந்த பதிவில் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்கார் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Back on the sets of #Sarkar ... guess whose hand..?!? pic.twitter.com/3D4e3yAvlV
— varu sarathkumar (@varusarath) July 16, 2018
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY #YogiBabu
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவக்கியுள்ளது. #Sarkar #VIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா, சென்னை என பிசியாக இருந்த படக்குழு அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு சில முக்கிய காட்சிகளையும், பாடல் காட்சி ஒன்றையும் படமாக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.
இந்த நிலையில், சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Finallllyyyyyy got permission to show our thalapathy @actorvijay thankkkk you @ARMurugadoss sir for allowing me.. heheheheh #sarkarpic.twitter.com/lTwMmoCsjg
— varu sarathkumar (@varusarath) July 10, 2018
அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு சமூகநல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன.
இந்த நிலையில், சர்கார் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசுகள், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படக்குழு விஜய் புகைப்பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Sarkar #Vijay
விஜய் நடிக்க முருக தாஸ் இயக்கும் படம் சர்கார். இந்த படத்தின் போஸ்டர்கள் கடந்த 21 ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். சில சுகாதார அமைப்புகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.
இந்நிலையில் புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பொது வெளியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு திரைத்துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. #Sarkar #Vijay
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் விஜய், வரலட்சுமியின் கதாபாத்திரங்கள் வைரலாகி வருகிறது. #Sarkar #VIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், படத்தை பற்றி புதுப்புது தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.
இதில் தற்போது, விஜய் மற்றும் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில் வரலட்சுமி முதலமைச்சரின் மகளாக நடிப்பதாகவும், வெளிநாட்டில் படிக்கும் வரலட்சுமி, விஜய்யின் தோழியாக நடித்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. எனினும் இந்த தகவல் குறித்து படக்குழு பதிலோ, மறுப்போ தெரிவிக்கவில்லை.

மற்றொரு தகவலின்படி படத்தில் வரலட்சுமி எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் உரிமையை வாங்க பிரபல நிறுவனம் ஒன்று முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. #Sarkar #VIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கைப்பற்ற படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையையும் தேனாண்டாள் பிலிம்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY
விஜய்யின் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சர்கார் படக்குழுவில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. #Sarkar #HBDThalapathyVIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட், கையில் லைட்டர், கண்ணில் கூலிங்கிளாஸ் என மாஸ் லுக்குடன் தோற்றம் அளிக்கிறார். இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதும் உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.

மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.ரகுமானுடன் விவேக் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட அனைத்து பாடல்களின் வரிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சர்கார் படத்திலும் விவேக் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Proud to be part of the Genius @arrahman Sirs music yet again for our Dear #Thalapathy@actorvijay Sir
— Vivek Lyricist (@Lyricist_Vivek) June 21, 2018
I m thrilled to b working wit the "The Delightful Duo" ..Its a dream to work with the socially conscious @ARMurugadoss sir..Now a reality
Big Tnx to @sunpictures n team #Sarkarpic.twitter.com/4WWHcjmDpt
போஸ்டர் ரிலீசுக்கு பிறகு விவேக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,
`தளபதி விஜய்க்காக இசை மேதாவி ஏ.ஆர்.ரகுமானுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. மீண்டும் இவர்கள் இரண்டு பேருடன் இணைவது பெருமிதம். பொதுநலத்தை மனதில் வைத்து படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் இணைய வேண்டுமென்ற கனவும் நிறைவேறிவிட்டது. சர்கார் படக்குழுவுக்கு நன்றி' என்று குறிப்பிட்டிருக்கிறார். #Sarkar #HBDThalapathyVIJAY #Vijay62






