என் மலர்

  சினிமா

  சர்கார் அப்டேட் - காதில் கடுக்கனுடன் மாஸ் தோற்றத்தில் விஜய்
  X

  சர்கார் அப்டேட் - காதில் கடுக்கனுடன் மாஸ் தோற்றத்தில் விஜய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவக்கியுள்ளது. #Sarkar #VIJAY
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்புக்காக கொல்கத்தா, சென்னை என பிசியாக இருந்த படக்குழு அடுத்ததாக அமெரிக்கா சென்று அங்கு சில முக்கிய காட்சிகளையும், பாடல் காட்சி ஒன்றையும் படமாக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

  இந்த நிலையில், சர்கார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் துவங்கியிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈ.வி.பி. பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் விஜய், வரலட்சுமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். 

  படப்பிடிப்பு தளத்தில் வைத்து கையில் குடையுடன், காதில் கடுக்கனுடன் நிற்கும் விஜய்யின் புகைப்படம் ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
  அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

  சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Sarkar #VIJAY

  Next Story
  ×