search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gayathri"

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இப்படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.


    இப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் இப்படம் குறித்து பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் 'நேர்கொண்ட பார்வை' அஜித் தனது சினிமா பயணத்தில் எடுத்த தவறான முடிவு என்று பதிவிட்டிருந்தார்.


    அஜித்- காயத்ரி

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை காயத்ரி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு படத்தின் வெற்றிக்கு பாக்ஸ் ஆஃபிஸ் என்பதை மட்டுமே அளவுகோலாக வைக்கக் கூடாது. அது சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இனிமேலும் அது தொடரும்' என பதிவிட்டுள்ளார்.


    நடிகர் போஸ் வெங்கட் கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்தது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

    “தயாரிப்பாளர் ஹஷீரின் முழு ஆதரவு இல்லாவிட்டால், 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இருக்க முடியாது. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ‘கன்னிமாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன? என்பதை வரையறுக்கும். சாதிக்க நினைக்கும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களை பற்றிய கதை, இது.



    மேட்டுக்குப்பம், விஜயராகவபுரம், சூளைமேடு ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவது, பொதுவான விஷயம். இதற்காக சென்னையில் அந்த 3 இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தினோம். ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதைநாயகன்-நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.

    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி, அவரை பயங்கரமாக சைட் அடித்தேன் என்று கூறியிருக்கிறார். #Gayathrie
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி என்று படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பெயர் எடுத்தவர் நடிகை காயத்ரி. இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வரும் வாரம் வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி:

    இந்த படத்துக்குள் வந்தது எப்படி?

    நாங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கிறோம். அதில் விஜய்சேதுபதி, தியாகராஜன் குமாரராஜா, 96 பிரேம் ஆகியோரும் இருக்கிறார்கள். நாங்கள் நேரம் கிடைக்கும்போது சந்தித்து பேசுவோம். அப்படித்தான் தியாகராஜன் எனக்கு தெரியும். அவர் ரொம்ப அமைதியாக இருப்பார். எதையும் அனுசரித்து செல்பவர். இதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்க மாட்டார். ஆனால் படப்பிடிப்பில் இதற்கு நேர்மாறாக இருந்தார். சின்ன சின்ன வி‌ஷயங்களில்கூட தான் நினைத்ததை கொண்டு வர சிரமப்படுவார்.

    உங்களுக்கு எத்தனை டேக்குகள் வரை போனது?

    நான் இந்த படத்தில் நடிக்க தொடங்கும்போது பிற நடிகர்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை இயக்குனர் எடுத்து இருந்தார். அதில் நடித்த ஒரு நடிகர் என்னிடம் 25வது டேக்கில் தான் இயக்குனர் ஓகே செய்ததாக சொன்னார். எனக்கு பயமாகி விட்டது. எப்போதுமே என்னுடைய முதல் டேக் தான் சிறப்பானதாக இருக்கும். ஆனால் பயந்ததுபோல் அதிக டேக்குகள் வாங்கவில்லை.



    அம்மாவாக நடித்தது ஏன்?

    கதையை கேட்டதும் நான் கூட யோசித்தேன். ஆனால் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம். எனவே இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். எனவே சம்மதம் கூறினேன்.

    விஜய் சேதுபதியுடனேயே தொடர்ந்து நடிக்கிறீர்கள்... நடிக்கும்போது போட்டி இருக்குமா?

    நிச்சயமாக இருக்கும். சூப்பர் டீலக்ஸ் டிரெய்லரில் அவரை பார்த்ததும் உங்களை பார்த்து பொறாமையாக இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் என் நடிப்பை புகழ்ந்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது. ஷில்பா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. விஜய் சேதுபதியை ஆண் தோற்றத்தில்கூட அந்த அளவுக்கு சைட் அடித்ததில்லை. ஷில்பாவை பயங்கரமாக சைட் அடித்தேன். டிரெய்லர் பார்த்தபோதுதான் அவரது உழைப்பு புரிந்தது.

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கவோ படம் இயக்கவோ ஆசை இருக்கிறதா?

    முதன்மை வேடத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் முழு படத்தை இயக்கும் எண்ணம் இல்லை. புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    காதல், திருமணம் எப்போது?

    எனக்கு இப்போது தான் கேரியரே ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கல்யாணம் செய்தால் நடிப்பை விட்டுவிட வேண்டும் என்கிற நிலை இப்போது இல்லை. அதனால், கண்டிப்பாகத் திருமணம் செய்தாலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், இப்போதைக்கு திருமண எண்ணம் இல்லை.
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார் காயத்ரி. #VijaySethupathi #Gayathri
    ‘96’  படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சீதக்காதி’. இப்படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர் இதற்குமுன் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 7வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்.



    இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான காயத்ரி, தற்போது இணைய தொடர் ஒன்றில் நடித்துள்ளார். #Gayathri
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி. தொடர்ந்து புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி படங்களில் நடித்தார். இந்த 4 படங்களிலுமே விஜய் சேதுபதி நடித்து இருந்தார். காயத்ரி நடிப்பில் அடுத்து வர இருக்கும் படங்கள் சூப்பர் டீலக்ஸ் மற்றும் சீதக்காதி. இவற்றிலும் விஜய் சேதுபதி தான் கதாநாயகன். காயத்ரி நடித்த இணைய தொடரான வெள்ள ராஜா ரிலீசாகி இருக்கிறது. இணைய தொடர்களுக்கான வரவேற்பு இந்தியில் உள்ள அளவுக்குத் தமிழில் உருவாகவில்லை.

    என்றாலும் குறிப்பிட்ட ரசிகர்கள் கூட்டம் இதற்கு உண்டு. பரிசோதனை முயற்சியாக, தங்களது திறமையை நிரூபிப்பதற்காக இளைஞர்கள் இணைய தொடர் பக்கம் வருகின்றனர். தற்போது பாபி சிம்ஹா, பார்வதி நாயர், காயத்ரி எனத் திரையுலகில் பிசியாக வலம் வரும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து புதிய இணைய தொடரில் நடித்துள்ளனர். 

    ‘வெள்ள ராஜா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸ் தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளி பரப்பப்படஉள்ளது. போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவராக பாபி சிம்ஹா நடித்துள்ளார். பார்வதி நாயர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காயத்ரியும், காளி வெங்கட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சவாரி திரைப் படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இதை இயக்கி உள்ளார்.
    ×