செய்திகள்

ரோஹிங்கியாக்கள் அகதிகள் அல்ல, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் - ராஜ்நாத் சிங்

Published On 2017-09-21 12:49 GMT   |   Update On 2017-09-21 12:49 GMT
ரோஹிங்கியா முஸ்லீம்கள் சட்டவிரோத குடியேறியவர்கள், அகதிகள் அல்ல என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வசிக்கும் ரோஹிங்கியாக்களை நாடு கடத்தும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் இன்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

மியான்மர் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தபோது சிலர் ஏன் ரோஹிங்கியா முஸ்லீம்கள் நாடு கடத்தப்படுவதை எதிர்த்தனர்? ரோஹிங்கியாக்கள் அகதிகள் அல்ல. அவர்கள் முறையான நடைமுறைகளை பின்பற்றி இங்கு வரவில்லை. இதுவரை எந்த ரோஹிங்கியாவும் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆவார்கள். ரோஹிங்கியாக்களை வெளியேற்றுவதன் மூலம் எந்த சர்வதேச சட்டத்தையும் இந்தியா மீறாது. 1950ம் ஆண்டு ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

அடுத்தவர்கள் மீதான மனித உரிமைகள் பற்றி பேசுவதற்கு முன் நம் நாட்டினரின் உரிமைகளையும் பார்க்க வேண்டும். சட்டவிரோத குடியேற்றம் சம்பந்தமாக தேசிய பாதுகாப்பு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை திரும்பப்பெறும் முயற்சிகளை மியான்மர் தொடங்கும் என நம்புகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News