செய்திகள்

ஐ.எஸ் தலைவன் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுகிறோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

Published On 2017-07-22 02:08 GMT   |   Update On 2017-07-22 02:08 GMT
ரஷ்யாவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தலைவன் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் தலைவர் ஜிம் மேட்டீஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர், உலகமெங்கும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஐ.எஸ் இயக்கத்தை ஒழிப்பதற்கான பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர்.

ஈராக்கில் ஐ.எஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங்களை அரசுப்படையினர் மீட்டுவிட்டனர். அரசுப்படையினரின் வான் தாக்குதலில் ஐ.எஸ் இயக்க தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவித்திருந்தது. கடந்த மாதம் ரஷ்ய ராணுவமும் இதே போல் பக்தாதி மரணமடைந்துவிட்டதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், அல்-பக்தாதி மரணமடைந்ததாக வந்த தகவல்களை அமெரிக்கா மறுத்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ், “அல் பக்தாதி மரணமடைந்ததாக நாங்கள்
கருதவில்லை. அவர கொல்லப்பட்டிருந்தால் கண்டிப்பாக எங்களுக்கு தெரியாமல் இருக்காது. எனவே அவர் உயிரோடு இருப்பதாகவே கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

அல் பக்தாதி மரணம் தொடர்பாக பல்வேறு குழப்பமான தகவல்கள் தொடர்ந்து வருவதால் அவரது உண்மையான நிலை என்பது தெரியாத நிலையே உள்ளது.
Tags:    

Similar News