search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US"

    • தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை.
    • தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இதில் காசாவில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.

    இந்த நிலையில் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற முயற்சியை பாலஸ்தீனம் மேற்கொண்டது.

    இதை பரிந்துரைக்கும் வரைவு தீர்மானத்தின் மீது 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 12 வாக்குகள் பதிவானது, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    தற்போது பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா.வின் நடவடிக்கைகளில் பாலஸ்தீனம் பங்கேற்க முடியும். ஆனால் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
    • அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

    வாஷிங்டன்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

    இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    • சிரியாவின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
    • இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரித்தது.

    டெஹ்ரான்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போரில் ஹமாசுக்கு லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆதரவாக உள்ளது. இந்த இயக்கத்துக்கு ஈரான் தனது ஆதரவை அளித்து வருகிறது. இதையடுத்து, சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மற்றும் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் இஸ்லாமிய புரட்சி படை தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கவேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரும் தாக்குதலை நடத்தலாம் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.
    • கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பத்ராசலம் ராமர் கோவில் தேவஸ்தானம் சார்பில் அமெரிக்கா, அட்லாண்டா அருகே உள்ள கம்மிங் பகுதியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் 33 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி செலவில் அங்கு ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

    கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சிலை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் சீதா, ராமர் சிலைகள் சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, அர்ஜென்டைனா, கலிபோர்னியா, ஐஸ்லாந்து, ஜப்பான், அலாஸ்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

    அதன் பின்னர் கோவிலில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை பத்ராசலம் ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் பத்மநாபாச்சாரி தெரிவித்துள்ளார்.

    • ரெயிலில் இருந்து குதித்ததில் பெண் காயம் அடைந்தார்.
    • விசாரணையில் அப்பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

    அமெரிக்காவுக்குள் மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைய பலர் முயற்சி செய்கிறார்கள். இதை தடுக்க எல்லைகளில் அமெரிக்க போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பபலோ நகரில் உள்ள சர்வதேச ரெயில் பாலத்தில் ஓடும் சரக்கு ரெயிலில் இருந்து குதித்த ஒரு பெண் உள்பட 4 பேரை அமெரிக்க எல்லை காவல் படையினர் பிடித்தனர். ரெயிலில் இருந்து குதித்ததில் பெண் காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் அப்பெண் உள்பட 3 பேர் இந்தியர்கள் என்பதும் மற்றொருவர் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் எந்த குடியுரிமை ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவர்கள் அமெரிக்காவிற்குள் ஆவணங்கள் இன்றி நுழைய முயன்றதும் தெரிய வந்தது.

    • 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார்.
    • 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

    சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார். இதற்கு 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

    கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தீபிகா குமாரி, லால்ரெம்சியாமி கைகொடுக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்திய பெண்கள் அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது....

    • ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஒருமுறை மட்டும் தாக்குதல் நடத்தப்படாது. பதிலடியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    இந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்கா முதலிடத்தை பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது.
    • குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டிலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    துருப்புக்களின் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காரணங்களை கொண்டு 2024-ம் ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ வலிமை கொண்ட நாடுகளின் தர வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது. 2-வது இடத்தில் ரஷியாவும் 3-வது இடத்தில் சீனாவும் உள்ளது.

    இந்த தர வரிசையில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 5 முதல் 10-வது இடத்தில் உள்ளன.

    அதேபோல் உலகில் மிகக்குறைந்த சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது. மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, பெலிஸ், சியரா லியோன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 10-வது இடத்தில் உள்ளன.

    குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

    • முதல்முறையாக 3,600 டாலர்களுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 6,300 டாலர்கள் வென்றார்.
    • மூதாட்டியின் புத்திசாலித்தனத்தால் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர்.

    அமெரிக்கா, மெக்சிகோ யவார்டை சேர்ந்தவர் ஜெர்ரி (வயது 80). அவரது மனைவி மார்ஜ் செல்பி (81). தம்பதியினர் அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து 60 வயதில் ஓய்வு பெற்றனர்.

    2003-ம் ஆண்டு, 'வின்ஃபால்' என்ற புதிய லாட்டரி சீட்டு விற்பனையை பார்த்த செல்பி, எப்படியும் ஜாக்பாட்டை அடிக்க விரும்பினார். சிறுவயதிலிருந்தே கணிதத்தில் சிறந்து விளங்கிய செல்பி, வெற்றி எண்ணை கணக்கிட்டு எப்படி பரிசு தொகை வழங்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார்.

    இந்த கணக்கை கண்டுபிடித்த செல்பி முதன்முதலில், மொத்தம் 1,100 டாலர்களை வைத்து 1900 டாலர்களை வெல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.

    அதன்படி முதல் முறையாக 3,600 டாலர்களுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 6,300 டாலர்கள் வென்றார். அதே எதிர்பார்ப்புகளுடன் மீண்டும் 8 ஆயிரம் டாலர்களுக்கு வாங்கி 16 ஆயிரம் டாலர்களை வென்றார்.

    செல்பி அதோடு நிற்கவில்லை. 9 வருடத்தில் 26 மில்லியன் டாலர்கள் வென்று உள்ளார். அதாவது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.200 கோடி சம்பாதித்தார்.

    மூதாட்டியின் புத்திசாலித்தனத்தால் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர்.

    இந்த ஜோடியின் கதையை வைத்து 'ஜெர்ரி அண்ட் மார்ஜ் கோ லார்ஜ்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    • வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது.
    • மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவில் உள்ள சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு தடை விதித்தது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் மாடல்களை அமெரிக்க சந்தையில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவானது. இது தொடர்பான உத்தரவில் இறுதி முடிவை அமெரிக்க அதிபர் தலைமையிலான அரசு எடுக்க வேண்டியிருந்தது.

    அந்த வகையில், வர்த்தக கூட்டமைப்பின் தடை உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தடை உத்தரவை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்து அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

     


    மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மசிமோ மற்றும் ஆப்பிள் இடையே கடந்த 2020 முதல் காப்புரிமை விவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மசிமோ சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்த பிலட் ஆக்சிஜன் சென்சிங் அம்சம் தொடர்பான காப்புரிமையை ஆப்பிள் மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் காப்புரிமையை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 போன்ற மாடல்களின் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு காரணமாக இரு வாட்ச் மாடல்களை ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

    • செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
    • டிரோன்கள், ஏவுகணைகளை வீசி கப்பல் மீது தாக்குதல்.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதையடுத்து செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்தனர். அதன்படி செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். டிரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதில் 10 நாடுகளை இணைத்து படையை உருவாக்கி செங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், பக்ரைனில் கூறியதாவது:-

    செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சர்வதேச சவாலாகும். இதற்கு புதிய பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை அறிவித்துள்ளோம்.

    இதற்கான பணியில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இணையும். சில நாடுகள் கூட்டு ரோந்து பணியை நடத்தும். மற்றவை தெற்கு செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடாவில் உளவுத்துறை ஆதரவை வழங்கும்

    இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

    • ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம்.
    • 18 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலை.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், ரஷியா உக்ரைன் இடையேயான போரில் இதுவரை ரஷிய ராணுவப்படையை சேர்ந்த 3 லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமுற்று இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரஷிய ராணுவத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும் போர் காரணமாக ரஷிய வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

     


    இதன் காரணமாக ரஷியாவின் போர் வாகனங்களின் நவீனத்தன்மை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஷியா போருக்காக பயன்படுத்திய அதிநவீன வாகனங்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய வாகனங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

    போர் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "உக்ரைனை தனித்துவிட மாட்டேன், அமெரிக்கர்களும் அப்படி செய்ய மாட்டார்கள்," என்று தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு கூடுதலாக 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.  

    ×