தமிழ்நாடு

தொடரும் கனமழை- தம்மம்பட்டியில் அதிகபட்சமாக 116 மி.மீ. மழை கொட்டியது

Published On 2024-05-23 06:03 GMT   |   Update On 2024-05-23 06:03 GMT
  • ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.
  • நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மங்களபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மே மாத தொடக்கத்தில் வீசிய வெப்ப அலையால் பொதுமக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்கி நாளில் இருந்து சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் பரவலமாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மதியம், இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.

இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையும் இருந்தது.

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 116 மி.மீ. மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சேலம்-6.5, ஏற்காடு-21.6, வாழப்பாடி-3, ஆனைமடுவு-18, ஆத்தூர்-15., கெங்கவல்லி-2, ஏத்தாப்பூர்-4, வீரகனூர்-12, நத்தக்கரை-13, சங்ககிரி-10, எடப்பாடி-7, மேட்டூர்-6.8, ஓமலூர்-12.5. டேனிஷ் பேட்டை-4.8. மாவட்டம் முழுவதும் மொத்தம் 252.4 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது பச்சை புற்கள் அதிகளவில் முளைக்க தொடங்கியதால் கால்நடைகளுக்கு தீவனங்களும் கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் எருமப்பட்டி, மங்களபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

எருமப்பட்டி-5, குமாரபாளையம்-11.2, மங்களபுரம்-28, மோகனூர்-25, நாமக்கல்-7, பரமத்திவேலூர்-5.5, புதுச்சத்திரம்-15.2, ராசிபுரம்-7, சேந்தமங்கலம்-12, திருச்செங்கோடு-6, கலெக்டர் அலுவலகம்-11.5, கொல்லிமலை செம்மேடு-29. மொத்தம் மாவட்டம் முழுவதும் 162.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News