செய்திகள்

வேற்று கிரகவாசிகளுக்கு பயந்து 40 ஆயிரம் பேர் இன்சூரன்சு

Published On 2017-06-22 05:28 GMT   |   Update On 2017-06-22 05:28 GMT
வேற்று கிரகவாசிகளால் தாங்கள் கடத்தப்படலாம் என்ற அச்சம் அமெரிக்கர்களில் பலருக்கு வந்துள்ளது. இதனால் அவர்களில் பலர் தங்களை இன்சூரன்சு செய்துள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க மக்களிடம் எதற்கெடுத்தாலும் தங்களை இன்சூரன்சு செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகளுக்கு பயந்து 40 ஆயிரம் பேர் இன்சூரன்சு செய்த சம்பவம் அங்கு நடந்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ வேற்று கிரகவாசிகள் பற்றி ஆராய்வதற்காக கெப்ளர் என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்தது. இதன் முடிவுகளை வெளியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.

எனவே, வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லையா? என்ற தகவல் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நாசா இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நமது சூரிய மண்டல பிரபஞ்சத்துக்கு வெளியே 4034 கிரகங்கள் இருப்பதாகவும் கெப்ளர் விண்கலம் மூலம் 219 கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் 10 கிரகங்கள் பூமியை போன்று சீதோஷ்ண நிலையுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்பது பற்றி எதையும் உறுதியாக சொல்லவில்லை.

இந்த நிலையில் வேற்று கிரகவாசிகளால் தாங்கள் கடத்தப்படலாம் என்ற அச்சம் அமெரிக்கர்கள் பலருக்கு வந்துள்ளது. இதனால் அவர்களில் பலர் தங்களை இன்சூரன்சு செய்துள்ளனர். இதுவரை 40 ஆயிரம் பேர் இன்சூரன்சு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Tags:    

Similar News