செய்திகள்

மேலூர் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 1000 பேர் மீது வழக்கு

Published On 2017-11-22 10:24 GMT   |   Update On 2017-11-22 10:24 GMT
மேலூர் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 1000 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் 4 வழிச்சாலையில் கடந்த திங்கட்கிழமை விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி 6 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் திருச்சி- மதுரை இடையே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் கள்ளந்திரி கால்வாயில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் ஆகியோர் தலைமையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து பாசனத்தை தொடங்கினர். இந்த நிலையில் மறியல் போராட்டம் தொடர்பாக மேலூர் போலீசார் விசாரணை நடத்தி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News