இந்தியா

டெல்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் தேவேந்தர் யாதவ்

Published On 2024-05-05 14:19 GMT   |   Update On 2024-05-05 14:19 GMT
  • அரவிந்த் சிங் லவ்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
  • எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன்.

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் முன்னாள் டெல்லி மந்திரி அரவிந்த் சிங் லவ்லி. இவர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த 28ம் தேதி அன்று தனது கட்சியின் மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.

தேவேந்தர் நியமனம் செய்யப்பட்டதற்கும், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏக்களான , நீரஜ் பசோயா, நசீப் சிங் ஆகியோர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினர்.

இந்நிலையில், டெல்லி காங்கிரஸில் ஏற்பட்டுள்ள தொடர் அரசியல் சலசலப்புகளுக்கு மத்தியில், டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவராக தேவேந்தர் யாதவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் தேவந்தர் சிங் பேசியதாவது:-

இது எனக்கு ஒரு முக்கியமான நாள். ஏனென்றால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்ததற்காக தலைமைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மேலும், எனது எல்லா பொறுப்புகளையும் நிறைவேற்ற கடினமாக உழைப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

இது கடினமான காலங்கள், ஆனால் நாங்கள் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News