இந்தியா

ஆந்திராவில் நிலநடுக்கம்- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2025-12-05 14:30 IST   |   Update On 2025-12-05 14:30:00 IST
  • நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
  • பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.05 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த மாவட்டத்தில் உள்ள தர்சி, முத்துரமூரு, தாளூரு, கங்காவரம், ராமபத்திராபுரம், மாண்டமூரூ, சங்காராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. சுமார் 3 வினாடிகள் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

பிரகாசம் மாவட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

வரும் நாட்களில் இது மீண்டும் நிகழக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லக்கூடிய வகையில், ஏதேனும் சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகள் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்," என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News