இந்தியா
அதிபர் புதினின் இந்தியா வருகையால் ரஷியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
- புதுடெல்லியில் பிரதமர் மோடி, அதிபர் புதின் ஆகியோர் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
- அப்போது பேசிய பிரதமர் மோடி ரஷியர்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா வசதியை வழங்கவுள்ளோம் என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், இந்தியா–ரஷியா நாடுகளுக்கு இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில், ரஷிய சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் இலவச இ-விசா வசதியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த முடிவு இரு நாடுகளின் நெருங்கிய உறவை பிரதிபலிக்கிறது.
புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி கூறுகையில், ரஷிய குடிமக்களுக்கு விரைவில் இ டூரிஸ்ட் விசா மற்றும் குரூப் டூரிஸ்ட் விசா வசதிகளை இலவசமாக வழங்க உள்ளோம். விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.