செய்திகள்

முழுஅடைப்பு போராட்டம்: கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் 50 பஸ்கள் நிறுத்தம்

Published On 2017-10-16 05:00 GMT   |   Update On 2017-10-16 05:00 GMT
முழுஅடைப்பு போராட்டம் எதிரொலியால் கேரளாவில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் 50 பஸ்கள் நிறுத்தப்பட்டன.

கோவை:

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கேரளாவில் பஸ் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காடு, எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் 32 கேரள மாநில அரசு பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை.

இதேபோல கோவை காந்திபுரம், உக்கடம் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படக்கூடிய 20 தமிழ்நாடு அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன.

இதனால் உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கம் போல கேரளாவுக்கு செல்ல பஸ் நிலையம் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.காலை 8.30 மணிக்கு பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஒரே ஒரு கேரள அரசு பஸ் உக்கடம் வந்தது. அந்த பஸ்சில் குறைந்த அளவு பயணிகள் ஏறி பாலக்காடு சென்றனர். இதையடுத்து தமிழக அரசு பஸ் புறப்படத் தயாரானது. ஆனால் பயணிகள் யாரும் இல்லாததால் அந்த பஸ் டெப்போவுக்கு திருப்பி விடப்பட்டது.

நிலைமை சகஜமான பின்னர் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News