செய்திகள்

பெரிய வெங்காயம் 20 ரூபாயாக சரிவு: கேரட், பீன்ஸ், அவரை விலையும் குறைந்தது

Published On 2017-09-18 06:33 GMT   |   Update On 2017-09-18 06:33 GMT
கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது.
சென்னை:

கோயம்பேடு காய்-கறி மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரமாக அனைத்து காய்கறிகள் விலையும் குறைந்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி, பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

ரூ.50-க்கு விற்கப்பட்டு வந்த பீன்ஸ், கேரட், அவரை போன்றவை தற்போது ரூ.25 முதல் ரூ.30 வரை கிடைக்கிறது. இதே போல தக்காளி விலை கிலோ ரூ.25 ஆக குறைந்துள்ளது.

பெரிய வெங்காயத்தின் விலையும் சரிந்துள்ளது. ஆந்திர வெங்காயம் கிலோ ரூ.15-ம், மகாராஷ்டிரா வெங்காயம் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறிய வெங்காயம் கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. அதன் விலை குறையவில்லை.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் எல்லா காய்கறிகளும் விலையேற்றத்துடன் காணப்பட்டன. ஆனால் தற்போது விலை குறைந்து வருவதற்கு காரணம் பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லை என்று மொத்த வியாபாரி சவுந்திரராஜன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகமாகவில்லை. வழக்கம்போல்தான் உள்ளது. தினமும் 250 முதல் 300 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. ஆனால் வியாபாரம் மந்தமாக உள்ளது.

வியாபாரிகள் மிக குறைந்த அளவில் வாங்கி செல்கின்றனர். மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News