செய்திகள்

சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குட்கா காட்டிய விவகாரம்: உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது

Published On 2017-08-28 11:58 GMT   |   Update On 2017-08-28 11:58 GMT
தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் குட்கா பாக்கெட்டுகளை காட்டிய விவகாரம் தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டசபை உரிமைக்குழு கூட்டம் இன்று கூடியது.
சென்னை:

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கூறி, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஜூன் 17-ம் தேதி சட்டசபைக்கு குட்கா பாக்கெட்டுகளை கொண்டு வந்து புகாரளித்தனர். சபாநாயகரின் முன் அனுமதி இல்லாமல் குட்கா பொருளை சபைக்குள் கொண்டு வந்ததாக கூறி அவர்கள் மீது உரிமைக்குழுவில் புகாரளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரிப்பதற்காக 17 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை உரிமைக்குழு இன்று கூடியது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்
தலைமையில் கூடிய இக்கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், கீதா, சரவணன்,

பரமேஸ்வரி, மருது முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.டி.வி தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஏழுமலை, ஜக்கையன்,
தங்கதுரை ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள் பங்கேற்கவில்லை.

தி.மு.க சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், மதிவாணன், ரகுபதி, ரவிச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சித்தலைவர்
மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் கொறடா விஜயதாரிணி கலந்துகொண்டார்.

கூட்டத்தில், அன்றைய தினம் பதிவான வீடியோ தொகுப்புகள் ஆராயப்பட்டது. தி.மு.க சார்பில் தங்களது தரப்பு நியாயங்களை குழுவில்
எடுத்துரைத்தனர்.
Tags:    

Similar News