செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு - மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

Published On 2018-04-13 08:26 GMT   |   Update On 2018-04-13 09:29 GMT
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. #CommonwealthGames2018 #CWG2018
சிட்னி:

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர்.

இன்று துப்பாக்கி சுடுதல் பிரிவில் இரண்டு தங்கம் கிடைத்தது. மகளிருக்கான 50 மீ ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனிஷ் பன்வாலா தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், மல்யுத்தப் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்றுள்ளது. ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இது இந்தியாவுக்கு கிடைத்த 17-வது தங்கம் ஆகும். இதுதவிர 57 கிலோ எடைப்பிரிவு பெண்களுக்கான ப்ரீஸ்டைல் போட்டியில் பூஜா தண்டா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

17 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது. 64 தங்கம் வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 29 தங்கப் பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. #CommonwealthGames2018 #CWG2018 #BajrangPunia
Tags:    

Similar News