இந்தியா

புனேவில் எரிவாயு டேங்கர் வெடித்து விபத்து- வீடுகள், ஓட்டல்கள் சேதம்

Published On 2024-05-19 13:36 GMT   |   Update On 2024-05-19 13:36 GMT
  • விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
  • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள சக்கன் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென எரிவாயு டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது.

வெடிப்பின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள ஓட்டல்கள், வீடுகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், எரிவாயு டேங்கரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பப்பட்டதாகவும், இதனால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

விபத்து தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் என்றும் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையின் டிசிபி சிவாஜி பவார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News