இந்தியா

கைக்குள் மர்ம பொருளை வைத்து தைத்த அரசு மருத்துவர்? கேரளாவில் மீண்டும் சர்ச்சை

Published On 2024-05-19 13:07 GMT   |   Update On 2024-05-19 13:11 GMT
  • குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது.
  • இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

குழந்தையின் கையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது. இந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவரை மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

 

இந்த சம்பவம் நிகழ்ந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையின் கேரள அரசு மருத்துவமனை மீண்டும் தவறான அறுவை சிகிச்சை செய்ததாக புகார் எழுந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய அந்த நபர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயில் சிகிச்சையில் நடந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. தனது கையில் மர்மமான பொருளை வைத்து மருத்துவர்கள் தைத்துள்ளதாக அந்த குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கையை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்பொழுது அதில் மர்மமான வடிவத்தில் பொருள் ஒன்று இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள அவர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பபோவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News