இந்தியா
null

ஆந்திராவில் பில்கேட்ஸ் வந்த விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு

Published On 2026-02-16 10:48 IST   |   Update On 2026-02-16 10:51:00 IST
  • சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வானில் சிறப்பு விமானம் வட்டமிட்டப்படி காத்திருந்தது.
  • சம்பவம் இன்று காலை விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று ஆந்திராவில் சஞ்சீவானி மருத்துவ சேவை உள்ளிட்ட சில முக்கிய சமூகத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.

மேலும் அவர் அமராவதியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.

இதற்காக சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை பில்கேட்ஸ் விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

காலையில், விஜயவாடாவை சுற்றியுள்ள பகுதிகளை அடர்ந்த மூடுபனி மூடியதால், ஓடுபாதை தெளிவாகத் தெரியவில்லை.

விமான இயக்கங்களுக்கான தெரிவுநிலை குறைந்தபட்ச நிலைக்குக் குறைந்தது.

இதனால் பில்கேட்ஸின் தனியார் ஜெட் விமான நிலையத்தை அடைந்தாலும், சிக்னல் கிடைக்காததால் விமானம் உடனடியாக இறங்க முடியவில்லை.

சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வானில் சிறப்பு விமானம் வட்டமிட்டப்படி காத்திருந்தது. பனி விலகிய பிறகு வானிலை ஓரளவு மேம்பட்டதால், விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன்பிறகு பில்கேட்ஸை ஆந்திர அதிகாரிகள் வரவேற்று பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

இந்த சம்பவம் இன்று காலை விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News