இந்தியா

பதஞ்சலி நிறுவனத்தின் தரமில்லாத சோன் பப்டி.. 3 பேருக்கு 6 மாதம் சிறை

Published On 2024-05-19 15:56 GMT   |   Update On 2024-05-19 15:56 GMT
  • பதஞ்சலியின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
  • உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

2019-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் லீலா தார் பதக் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் பதஞ்சலி நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சோதிக்கப்பட்ட சோன் பப்டி தரமானது இல்லை என்று ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளர் லீலா தர் பதக், விநியோகஸ்தர் அஜய் ஜோஷி, பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரமில்லை என்ற அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மேலும், கடை உரிமையாளர் லீலா தர் பதக்குக்கு 5000 ரூபாயும் விநியோகஸ்தர் அஜய் ஜோஷிக்கு 10,000 ரூபாயும், பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமாருக்கு 25,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News