இந்தியா

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளா- வெளியான பரபரப்பு வீடியோ

Published On 2024-05-19 16:11 GMT   |   Update On 2024-05-19 16:11 GMT
  • சிலந்தி ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.
  • தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவது, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், குடிநீருக்காக என கூறி சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News