இந்தியா

'ஹெல்மெட்' அணியாமல் மொபட் ஓட்டிய மணமகள்- வீடியோ வைரலானதால் அபராதம்

Published On 2023-06-12 09:19 GMT   |   Update On 2023-06-12 09:19 GMT
  • செல்லான் விபரங்களையும் டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர்.
  • தயவு செய்து விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம், போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டிருந்தனர்.

டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த நிலையில் மணமகள் கோலத்தில் ஒரு இளம்பெண் 'ஹெல்மெட்' அணியாமல் மொபட்டில் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து மொபட்டில் உள்ள வாகன எண் மூலம் அந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீசார் அவருக்கு 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.1,000 மற்றும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

இதுதொடர்பான செல்லான் விபரங்களையும் டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், தயவு செய்து விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம், போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள் என குறிப்பிட்டிருந்தனர். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

Similar News