இந்தியா

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி

Published On 2024-05-23 15:58 GMT   |   Update On 2024-05-23 15:58 GMT
  • டெல்லியில் உள்ள 7 தொகுதிக்கும் ஒரேகட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று டெல்லி மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக ராகுல் காந்தி பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் பயணத்தின்போது மக்களுடன் அவர் உரையாடினார். மக்களும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News