இந்தியா

சமாஜ்வாடி முடிந்து போன கட்சி: 10 வருடத்திற்குப் பிறகு அதை மக்கள் மறந்து விடுவார்கள்- ராஜ்நாத் சிங்

Published On 2024-05-23 14:25 GMT   |   Update On 2024-05-23 14:25 GMT
  • சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது.
  • 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

மோடிக்கு 400-க்கும் அதிகமான இடங்களை வழங்கி, மீண்டும் மத்தியில் ஆட்சியை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள் அவர்கள் மனதில் உருவாக்கிவிட்டனர். உத்தர பிரதேசத்தில் நாங்கள் 80 இடங்களிலும் வெற்றி பெறுவோம். இது என்னுடைய நம்பிக்கை.

சமாஜ்வாடி, காங்கிரஸ், பிஎஸ்பி மக்களை ஏமாற்றியுள்ளது. அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. மக்கள் தற்போது சமாஜ்வாடி கட்சியை சமாப்த் (samapt- முடிந்தது) கட்சி (முடிந்து போன கட்சி) என சொல்கிறா்ரகள். 10 ஆண்டுளுக்குப் பிறகு மக்கள் சமாஜ்வாடி கட்சியை மறந்துவிடுவார்கள்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News