இந்தியா

ஏழு தொகுதிகளிலும் அமோக வெற்றியை தாருங்கள்: டெல்லி மக்களுக்கு சோனியா வேண்டுகோள்

Published On 2024-05-23 12:39 GMT   |   Update On 2024-05-23 12:39 GMT
  • இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல்.
  • உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். பணவீக்கத்தை குறைக்கும்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நாளை மறுதினம் 25-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு (ஆம் ஆத்மி) வாக்களித்து ஏழு தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என டெல்லி மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சோனியா காந்தில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தில் கூறியிருப்பதாவது:-

இது மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான தாக்குதலை எதிர்த்து போரிடுவதாகும். இந்த போரில் உங்களுடைய பங்கை நீங்கள் ஆற்ற வேண்டும்.

உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும். பணவீக்கத்தை குறைக்கும். பெண்களுக்கு அதிகாரத்தை வழங்கும். பிரகாசமான எதிர்காலத்தோடு சமநிலையை உருவாக்கும். டெல்லியில் உள்ள ஏழு தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

இவ்வாறு அந்த வீடியோவில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News