இந்தியா

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி

Published On 2024-05-23 13:20 GMT   |   Update On 2024-05-23 13:20 GMT
  • மும்பை பங்குச் சந்தை முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது.
  • இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது.

மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் நேற்று 74.221.06 சென்செக்ஸ் புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் 74.253 சென்செக்ஸ் புள்ளிகளுடன் தொடங்கியது.

நேரம் செல்லசெல்ல வர்த்தகத்தின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றது. மதியம் 3.15 மணியளவில் வர்த்தகம் 75,499.91 புள்ளியை தொட்டது. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இந்த உயரத்தை வர்த்தகம் தொட்டது கிடையாது.

முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது. இன்று குறைந்தபட்சமாக 74,158.35 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் உச்சத்தை எட்டியது. நேற்றைய முடிவில் இருந்து கணக்கிடும்போது மும்பை பங்குச்சந்தை வர்த்தம் 1196.98 புள்ளிகள் அதிகரித்தது.

அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 22,993.60 புள்ளிகளில் வர்த்தகமானது. 22,967.65 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

மகிந்திரா அண்டு மகிந்திரா, லார்சன் அண்டு டூர்போ, ஆக்சிஸ் பேங்க், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், இந்துஸ்இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசி பேங்க், டைட்டன், டாட்டா கல்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டட்ரிஸ் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

சன் பார்மா, பவர்கிரிட், என்டிபிசி பங்குகள் சரிவை சந்தித்தன.

மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையை பொறுத்தவரையில் ஆசிய பங்குசந்தைகளில் சியோல் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. ஷாங்காய், ஹாங்காங் இறக்கத்தில் முடிவடைந்தது. ஐரோப்பிய மார்க்கெட்டுகள் ஏறக்குறைய ஏற்றத்தில்தான் இருந்தது.

Tags:    

Similar News