கனடா பள்ளியில் துப்பாக்கி சூடு... பிரதமர் மோடி இரங்கல்..!
- கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.
- துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்.
கனடா நாட்டின் பள்ளியில் துப்பக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கனடாவி் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7 முதல் 12-ம் வகுப்பு வரை 175 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளிக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அந்த நபர் பள்ளிக்குள் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.
இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அலறியடித்து ஓடினார்கள். தாக்குதலில் பலர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளிக்குள் சென்று தாக்குதல் நடத்தியவரை தேடினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவரை சேர்த்து 10 பேர் பலியாகினர்.
25 பேர் காயம் அடைந்தனர். மீட்பு குழுவினர் காயமுற்றவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பள்ளிக்குள் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஊழியர்களை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.