என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா துப்பாக்கி சூடு"

    • துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கனடா:

    கனடாவின் தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது ஒரு கும்பல் அங்கு புகுந்து துப்பாக்கியால் சுட்டது.

    இதனால் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் டொரண்டோவை சேர்ந்த சையத் மொஹமது அலி(வயது 26), அப்திஷாகுர் அப்தி தாஹிர்(36) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

    6 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன? இனப்பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ×