இந்தியா

பஞ்சாபில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர சோதனை

Published On 2026-02-11 11:24 IST   |   Update On 2026-02-11 11:24:00 IST
  • வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் உடனடியாக பள்ளிகளை மூடிய நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • வெடிகுண்டு மிரட்டலை உறுதிபடுத்திய டி.எஸ்.பி. ஹர்சிம்ரன் சிங் பால், பள்ளிகளை மூடி தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த உடன் உடனடியாக பள்ளிகளை மூடிய நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை உறுதிபடுத்திய டி.எஸ்.பி. ஹர்சிம்ரன் சிங் பால், பள்ளிகளை மூடி தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மொகாலியில் யத்விந்திரா பப்ளிக் பள்ளி, மானவ் மங்கள் பப்ளிக் பள்ளி, ரியான் இன்டர்நேஷனல் பள்ளி, பாரகன் பள்ளி, ஷெம்ராக் பள்ளி மற்றும் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மொகாலி போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் பல்வேறு பள்ளிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News