null
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 3 நாள் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
- 17-ந்தேதி மும்பையில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
- 19-ந்தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 3 நாள் சுற்றுப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார். இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாடு (AI Impact Summit) மாநாட்டில் கலந்து கொள்கிறார். வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிப்ரவரி 17-ந்தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர் டெல்லியில் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறும் ஏ.ஐ, உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய இருக்கிறது.