செய்திகள்
பாலிதீன் பை

குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் வைத்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம்

Published On 2020-12-11 02:02 GMT   |   Update On 2020-12-11 02:02 GMT
குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் சேகரித்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெங்களூரு :

பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு நகரில் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பாலிதீன் பைகளில் குப்பை கழிவுகளை சேகரித்து வைத்து அவற்றை பார்சல்போல் கட்டி போடுகின்றனர். 

இதனால் பொதுமக்களிடம் இருந்து குப்பை கழிவுகளை சேகரிக்க செல்லும் துப்புரவு தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். இந்த நிலையில் குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் சேகரித்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News