செய்திகள்
ராகுல் காந்தி

பணமதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது -ராகுல் காந்தி

Published On 2019-11-08 10:27 GMT   |   Update On 2019-11-08 10:31 GMT
பணமதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை சாடியுள்ளார்.
புதுடெல்லி:

கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புழக்கத்தில் இருந்த ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டது. பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கை பெரும் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் 3  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அரசை சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தின் மீது பேரழிவு தாக்குதல் நடத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து, லட்சக்கணக்கான சிறு தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பை பறித்த  பணமதிப்பிழப்பு என்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News