செய்திகள்

கேரளாவில் பா.ஜ.க.வினர் படுகொலையை கண்டித்து 15 நாள் பாதயாத்திரை: அமித் ஷா தொடங்கி வைக்கிறார்

Published On 2017-09-25 11:31 GMT   |   Update On 2017-09-25 11:31 GMT
கேரளாவில் பா.ஜ.க.வினர் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள 15 நாள் பாதயாத்திரையை வரும் 3-ம் தேதி அமித் ஷா தொடங்கி வைக்கிறார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சமீப காலமாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினரை குறிவைத்து தாக்குதல்கள் பெருகி வருகிறது. இந்த தாக்குதல்களில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசியலை மையமாக வைத்து நடைபெறும் இந்த தாக்குதல்களை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசின் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்த பா.ஜ.க. தலைமை தீர்மானித்துள்ளது.

அக்டோபர் 3-ம் தேதியன்று இந்த பாதயாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கி வைப்பார் என ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News