செய்திகள்

உ.பி.யில் குழந்தைகள் பலியான சம்பவம் படுகொலை என சிவசேனா கட்சியின் நாளிதழ் விமர்சனம்

Published On 2017-08-14 19:59 GMT   |   Update On 2017-08-14 19:59 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவம் படுகொலைக்கு சமமானது என பா.ஜ.க.வின் கூட்டணிக்கட்சியான சிவசேனாவின் கட்சி நாளிதழான சாம்னா விமர்சித்துள்ளது.
மும்பை:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவம் படுகொலைக்கு சமமானது என பா.ஜ.க.வின் கூட்டணிக்கட்சியான சிவசேனாவின் கட்சி நாளிதழான சாம்னா விமர்சித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம், கோராக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆறு நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த கோர சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவின் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், ”நாடு சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் இத்தகைய கொடூரம் நிகழந்துள்ளது. இந்த சம்பவம் படுகொலைக்குச் சமமானது” என்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.



மேலும், “ ஏழையின் குழந்தைகள் தான் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மரணமடைந்துள்ளன, ஏன், வசதி படைத்தவர்களின் குழந்தைகள் உயிரிழக்கவில்லை?” என்று அதில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா உதவியுடன் பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News