செய்திகள்

நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

Published On 2017-07-05 08:43 GMT   |   Update On 2017-07-05 08:43 GMT
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதை தொடர்ந்து புதிய மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் இன்று அனுமதியளித்துள்ளனர்.
புதுடெல்லி:

காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை அளிக்கக் கோரி காவிரி நடுவர்மன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை. இதையடுத்தும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தமிழகமானது காவிரி நீரை பெற்று வருகிறது. மேலும், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை.

கடந்த செப்டம்பர் பங்கான, 22.5 டிஎம்சிக்கு பதிலாக 16.5 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. கர்நாடக அரசு 5.966 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து தமிழகத்திற்கு செப்டம்பர் மாதத்தில் வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளதாக தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்து.

கர்நாடகம் போதிய நீர் தரவில்லை என்பதால் உடனடியாக தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தமிழக
அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. இம்மனு ஏற்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News