செய்திகள்

மீரா குமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்: நிதிஷ்குமார்

Published On 2017-06-23 16:22 GMT   |   Update On 2017-06-23 16:22 GMT
எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் தோற்பதற்காகவே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ’’எதிர்க்கட்சிகள் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள மீராகுமார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. இதனால் பா.ஜ.க சார்பில் தேர்வான ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. பீகாரின் மகளான மீராகுமார் தோற்பதற்காகவே எதிர்கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்தார்.

முன்னதாக ‘‘பீகாரின் மகளான மீராகுமாருக்கு ஆதரவு அளிக்காததன் மூலம் நிதிஷ்குமார் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்’’ என லாலு பிரசாத் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், லாலு அளித்த இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதிஷ்குமார், அவர் முன்னிலையில் மீராகுமார் தோற்பது என கூறியுள்ளது அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News