search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி"

    • 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை பொதுச்செயலாளர் கனிமொழி வழங்கினார்.
    • மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கழக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை பொதுச்செயலாளர் கனிமொழி வழங்கினார்.

    மேலும் பல்வேறு மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி எம்.பி., கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்தலாம் என எதிர்க் கட்சிகளின் கனவு பலிக்காது. மேலும் தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு என்று அழைப்பதில் பயம். ஏனென்றால் தமிழ்நாடு என்று அழைப்பதால் தனித்துவம் பெற்றுவிடும் .எனவே தமிழகம் என்று அழைக்க வேண்டும் என கூறுகிறார். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையில் யார் யார் எல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஆளுநர் இல்லை. முடிவு செய்யும் அதிகாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மட்டும் தான் உள்ளது. அவ்வாறு ஆளுநர் முடிவு செய்ய நினைத்தால் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யட்டும் என தெரிவித்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், வெளிநாடு வாழ் தமிழ் நல உரிமை சங்க தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாமக்கல் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி, தாராபுரம் நகர அவைத்தலைவர் கதிரவன், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர் மன்ற தலைவரும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான கு. பாப்பு கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.வி.செந்தில் குமார், சந்திரசேகர், பழனிச்சாமி,சிவ செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவ செல்வன், பேரூர் செயலாளர்கள் மக்கள் தண்டபாணி, கொளத்துப்பாளையம் துரைசாமி, கன்னிவாடி சுரேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அமுதா, துணை அமைப்பாளர்கள் ஹைடெக் அன்பழகன், ஆனந்தி,கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி மற்றும் ஸ்ரீதர், ராசாத்தி பாண்டியன்,கபடி சக்தி வேல் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×