செய்திகள்

விவசாயிகள் தற்கொலை பிரச்சினைக்கு கடன் தள்ளுபடி தீர்வு ஆகாது: நிதின் கட்காரி

Published On 2017-05-29 03:52 GMT   |   Update On 2017-05-29 03:52 GMT
கடன் தள்ளுபடி நிச்சயமாக விவசாயிகள் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வருவதில் தீர்வாக அமையாது என்று பா.ஜனதா மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நாக்பூர் :

விதர்பா மண்டலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வுகான விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு கடன் தள்ளுபடி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில் விதர்பா மண்டலத்தை சேர்ந்த பா.ஜனதா மத்திய மந்திரி நிதின் கட்காரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடன் தள்ளுபடி ஓரளவுக்கு நிவாரணமாக அமையலாம். ஆனால் இது நிச்சயமாக விவசாயிகள் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வருவதில் தீர்வாக அமையாது. விதர்பாவில் விவசாய தற்கொலைக்கு முக்கிய காரணம் அங்கு சரியான நீர்பாசன வசதி இல்லாததே. தற்போது 50 சதவீத விவசாய நிலத்திற்கு நீர்பாசன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது நல்ல முன்னேற்றம். இதன்மூலம் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News