உள்ளூர் செய்திகள்

ஏரியா சபை கமிட்டி- தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு

Published On 2022-07-05 08:01 GMT   |   Update On 2022-07-05 10:25 GMT
  • ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
  • இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-ல் கொண்டு வரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும். ம.நீ.ம.வின் பணிகள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News