என் மலர்

  நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல. வளர்ச்சிப்பாதை.
  • மத்திய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்கும் காரியத்தை செய்வது வேதனை அளிக்கிறது.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழகத்துக்கு வரும்போது மட்டும் மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்களையும் மேற்கோள்காட்டி பேசுவதும், நடைமுறையில் தமிழைப் புறக்கணிப்பதும் மத்திய அரசுக்கும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது. இப்போது தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல. வளர்ச்சிப்பாதை. ஆனால் மத்திய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்கும் காரியத்தை செய்வது வேதனை அளிக்கிறது.

  இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில், மேன்மையான தமிழ் மொழிக்கு மிகக்குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே தமிழ்மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில்தான் செல்வாக்கு உள்ளது. கிராமங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.
  • கிராம மக்களும் கை கொடுத்தால் தான் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஊட்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

  இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் கமல்ஹாசனுக்கு நகர்ப்புறங்களில்தான் செல்வாக்கு உள்ளது. கிராமங்களில் அவருக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.

  எனவே கிராம மக்களும் கை கொடுத்தால் தான் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு கிராமங்களை நோக்கி செல்ல கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். கிராம மக்கள் மத்தியில் தனது திட்டங்களை விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் நினைக்கிறார்.

  கமல் திட்டத்துக்கு கிராம மக்கள் கை கொடுப்பார்களா? என்பது தேர்தல் சமயத்தில்தான் தெரியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • மின்விசிறி, டி.வி., மிக்சி ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திண்டுக்கல்:

  மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் சீனிவாச பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர் திருமூர்த்தி, மகளிரணி செயலாளர் சமேஸ்வரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மின்கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் மின்விசிறி, டி.வி., மிக்சி ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதில் நத்தம் ஒன்றிய செயலாளர் லட்சுமிபதிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • ஆட்சிக்கு வந்தபின்னர், “அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்” என்றார் நிதி அமைச்சர்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

  மக்கள் நீதி மய்யம் முதலில் முன்வைத்த "மகளிர் உரிமைத் தொகையானது" தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.

  கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  ஆட்சிக்கு வந்தபின்னர், "அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம்" என்றார் நிதி அமைச்சர்.

  கடந்த பட்ஜெட்டின் போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதி அமைச்சர்.

  தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதி அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் "மகளிர் உரிமைத்தொகை" திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மய்யத்தை நோக்கிவரும் இளைஞர்களை இருகரம் கூப்பி வரவேற்று உரிய வாய்ப்பளிக்கவேண்டும்.
  • கொடிக்கம்பங்கள் நடுவதோடு மரக்கன்றுகளையும் நடவேண்டும்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிக்காக மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் மாவட்டந்தோறும் பயணித்து கூட்டம் நடத்தி வருகின்றனர்.

  இன்று முதல் அடுத்த 12 நாட்களுக்கு நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று ராசிபுரத்தில் (நாமக்கல்) நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் கமல்ஹாசன் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

  மய்யத்தை நோக்கிவரும் இளைஞர்களை இருகரம் கூப்பி வரவேற்று உரிய வாய்ப்பளிக்கவேண்டும்; கொடிக்கம்பங்கள் நடுவதோடு மரக்கன்றுகளையும் நடவேண்டும்; அனைவரையும் அரவணைத்து கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கி மய்ய நிர்வாகிகளை ஊக்கப்படுத்தினார்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை.
  • 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக இருந்தால் அதில் ஒரு ரூபாயை அளியுங்கள் என்று கமல்ஹாசன், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது.

  இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

  அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நபராக இருந்தால் அதில் ஒரு ரூபாயை அளியுங்கள் என்றும் கமல்ஹாசன், நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார். கட்சி வளர்ச்சிக்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
  • இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

  கிராம சபைகளைப் போலவே, நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-ல் கொண்டு வரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

  தற்போது ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும். ம.நீ.ம.வின் பணிகள் தொடரும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதை கைவிட வேண்டும்.
  • மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  அ.தி.மு.க. ஆட்சியின் போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க. இப்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், கருப்பு உடையணிந்துப் போராட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. திமுக ஆட்சியிலும் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவது தொடர்கிறது.

  கடந்த சில மாதங்களாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

  டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

  தி.மு.க. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுக்கு வருவாயை பெருக்குவதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.

  எனவே, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள், பிரதான சாலை அருகில் மதுக்கடைகளைத் திறப்பதை கைவிட வேண்டும். மேலும், ஏற்கனவே மக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடவும், டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • நெல்லை மண்டலத்துக்குட்பட்ட தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும் அடுத்தடுத்த நாட்களில் ஆலோசனை நடைபெறுகிறது. மொத்தம் 11 நாட்கள் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
  • இதனை தொடர்ந்து திருச்சி, மதுரை, விழுப்புரம், சென்னை, கோவை உள்பட 8 மணடலங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவின் பேரில் மண்டல வாரியாக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

  குமரி மாவட்டம் பூந்துறையில் இன்று மாலை முதல் கூட்டம் நடைபெறுகிறது. நாளை கண்டன்விளையிலும், அதற்கு மறுநாள் நாகர்கோவிலிலும் இந்த கூட்டம் நடக்கிறது.

  நெல்லை மண்டலத்துக்குட்பட்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் சிவ இளங்கோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.

  நெல்லை மண்டலத்துக்குட்பட்ட தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும் அடுத்தடுத்த நாட்களில் ஆலோசனை நடைபெறுகிறது. மொத்தம் 11 நாட்கள் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

  இதனை தொடர்ந்து திருச்சி, மதுரை, விழுப்புரம், சென்னை, கோவை உள்பட 8 மணடலங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களின் கட்சியின் மற்ற மாநில நிர்வாகிகள் பங்கேற்க தொடர்ச்சியாக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது பற்றியும், உள்ளூர் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்.

  மண்டல அளவில் கூட்டத்தை நடத்தும் மாநில நிர்வாகிகள், கமல்ஹாசனை விரைவில் சந்தித்து கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலுக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல்ஸ் பிளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
  • துரிதமாக ரத்தம் வழங்கும் திட்டத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (14-ந்தேதி) மக்கள் நீதி மய்யம் சார்பாக, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல்ஸ் பிளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட விருக்கிறது. அதன் தொடக்க விழா நாளை (13-ந்தேதி) காலை 11 மணியளவில், கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் கமல்ஹாசன் கரங்களால் தொடங்கி வைக்க, விழா சிறப்புடன் நிகழவிருக்கிறது.

  விழாவில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அவர்களுக்கெனத் தனியாக ‘மாணவர் சிறப்பு பஸ்’ இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ‌ஷம்ஷேர் கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

  தமிழகம் முழுவதும் பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக்கொண்டே ஆபத்தான முறையில் பயணிப்பது தொடர்கதையாகி விட்டது.

  கொரோனா காலம் முடிந்து கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டதிலிருந்து ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கலாம்’ என அறிவிக்கப்பட்டது.

  பள்ளி மாணவர்கள்

  ஆனால், சென்னை மாநகரில் சாதாரணக் கட்டணம், விரைவுப்பேருந்து, சொகுசுப்பேருந்து என மூன்று வகையான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சாதாரணக் கட்டணம் வசூலிக்கும் பேருந்தில் மட்டுமே மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்ய இயலும்.

  காலை நேரத்தில் பணிக்குச் செல்வோரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால், கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  கொரோனா இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை குறித்த எச்சரிக்கைகள் வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய அவர்களுக்கெனத் தனியாக ‘மாணவர் சிறப்பு பஸ்’ இயக்கப்பட வேண்டும்.

  மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை கவனத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ‘பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக தனிப்பேருந்து’ இயக்கப்படுவதை அரசு விரைவாகப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print