search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kamal Haasan"

  • காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை.
  • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.

  தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.

  ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.

  இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.

  அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

  இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.


  கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

  ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.

  ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.

  ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.

  இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

  இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

  ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

  • விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன
  • மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இணைத்து ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டு உள்ளது.

  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

  இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.

  இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர்.

  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
  இந்நிலையில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலாவை மீண்டும் இந்தியன் - 2 படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

  இதில் சில காட்சிகளில் மனீஷா நடிக்க உள்ளார். இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.
  எனவே விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன. அந்த காட்சிகளை படத்தில் இணைத்து ஜூன் மாதம் இந்தியன் 2 படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
  • தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது.

  மதுரை:

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

  அந்த வகையில் அவர் இன்று மதுரை ஆனையூரில் மாலை 6 மணிக்கும், இரவு 7 மணிக்கு புதூர் பேருந்து நிலையத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் அவர் மதுரைக்கு வருகை தந்தார்.

  விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சிறப்பாக பணியாற்றி வரும் காம்ரேட் வெங்கடேசனுக்காக நான் வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன். நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

  • எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும்.
  • கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா?

  சரவணம்பட்டி:

  ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "பாஜகவின் கற்பனைப்படி நாக்பூர் தலைநகர் ஆக வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக வேண்டும். பாடத்திட்டத்திலும், புராணமே சரித்திரமாக மாற வேண்டும். அனைத்து தொழிலும் ஒரு சிறு குழுவுக்கே போய் சேர வேண்டும். இதெல்லாம் நடந்தா இப்ப மட்டும் இல்ல, எப்பொழுதுமே நாம் எல்லோருமே தெருவில் நிற்க வேண்டும். அதை நடக்கவிடக் கூடாது என்று பேசினார்.

  இதுகுறித்து கோவை சரவணம்பட்டியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை கூறியதாவது:-


  மெண்டல் ஹாஸ்பிடல் போய் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும். யார் சொன்னாலும் கூட மூளையை சோதனை செய்ய வேண்டும். உண்மையாலுமே நல்லா இருக்காங்களா? இரண்டு மூளையும் வேலை செய்கிறதா? சுயநினைவுடன் தான் இருக்காங்களா? சரியா சாப்பிடறாங்களா? என்று கமல்ஹாசனுக்கு மருத்துவ ஆலோசனை தரவேண்டும்.

  எப்படி இந்தியாவின் தலைநகரை நாக்பூருக்கு மாற்ற முடியும். கமல்ஹாசன் சுய நினைவுடன், ஆரோக்கியமான கருத்துக்களை தான் பேசுகிறாரா? இல்லை தி.மு.க.வுக்கு தன்னுடைய கட்சியை ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக விற்கறதுக்காக இப்படி கூவ வேண்டும் என்று கமல்ஹாசன் நினைக்கிறாரா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

  • பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை.

  சரவணம்பட்டி:

  கோவை சரவணம்பட்டியில் பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  * கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

  * பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  * தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை.

  * விளையாட்டு மைதானம் தேவை தான். ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும்.

  * கவர்ச்சிக்கரமான திட்டங்களை கொடுத்தால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று முதலமைச்சரே களத்தில் இறங்கி இருக்கிறார். அதுவும் பாராளுமன்ற தேர்தலின்போது. அவர்கள் 511 தேர்தல் வாக்குறுதி கொடுத்து வெறும் 20 வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.


  இதனிடையே, பா.ஜ.க.வில் மாநில தலைவர் பதவிக்கு ஆள் இல்லை. ரெடிமேட் அரசியல்வாதி என்று ஆர்.பி. உதயகுமார் சொல்கிறார் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை, ஜூன் 4-ந்தேதி வரை பொறுத்து இருக்க சொல்லுங்க. அந்த கட்சி எங்க இருக்கு, அவர் எங்க இருக்காரு, எத்தனை இடத்துல எத்தனை ஓட்டு வாங்குறாங்க. என்ன இன்னும் 40 நாட்கள் தான் இருக்கு. ஒரு விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும். அதுபோலதான் இன்றைய தலைவர்களின் கருத்துக்களையும் பார்க்கிறேன் என்றார்.

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது.
  • எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது.

  சென்னை:

  அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் சிங்கமுத்து பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு இடையே சிங்கமுத்துவிடம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் குறித்து கேட்ட போது அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

  கேள்வி:- ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் ஆட்சி கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருவது பற்றி உங்கள் கருத்து?

  பதில்:-அவர் ஆசை அப்படி இருக்கிறது. தமிழ்நாட்டை முதலில் சீர் திருத்தட்டும். தமிழக மக்கள் கண்ணீரும், கவலையுமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அரையும் குறையுமாக இருக்கின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழ் மக்கள் வாடி வதங்கி இருக்கிறார்கள். முதலில் தமிழகத்தை சரி பண்ணட்டும். பிறகு எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.

  கேள்வி:-தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க. வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்வது பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறதே?

  பதில்:- கமல்ஹாசன் மக்களின் மனங்களை அறியாதவர். மக்களோடு மக்களாக இருக்காதவர். திடீரென ஒரு கட்சி தொடங்கி புரட்சி தலைவர் போலவும், புரட்சி தலைவி போலவும் நாட்டை பிடித்து விடலாம் என்று அவர் கற்பனையில் இருக்கிறார். அது நடக்காது. கமல்ஹாசன் எப்போதும் ஒரு ஓட்டுக் குதிரையில் பயணம் செய்வார் அவ்வளவுதான்.

  கேள்வி:- காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பெண்களுக்கு வழங்கப் படும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதே?

  பதில்:- எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக ரூ.1 லட்சம் என்பார்கள், 2 லட்சம் என்பார்கள். பிறகு நிதி இல்லை என்பார்கள். இது காங்கிரஸ், தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. இது எதையுமே அவர்களால் செய்ய முடியாது.

  கேள்வி:- இந்த தேர்தலில் நடிகர் வடிவேலு மவுனம் காத்து வருகிறாரே?

  பதில்:-வடிவேலு மவுனம் காத்து வருவதை என்னை விட பொருத்தமாக யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் நாங்கள் இருவரும் ஒரே திரைத்துறையில் பயணம் செய்தவர்கள். அரசியல் எனக்கு ராசியில்லை என்று அவரே சொல்லிவிட்டாரே? பிறகு ஏன் அவரை அழைக்கிறார்கள்?

  கேள்வி:-பிரதமர் மோடி தான் என்னை ராமநாதபுரத்தில் போட்டியிட சொன்னார் என ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்து வருகிறாரே?

  பதில்:-அவர் சொல்வது அவருக்கு மட்டும் தானே தெரியும். நாம் எல்லாம் கேட்டோமா? பொய் கூட சொல்லலாம் அல்லவா?

  கேள்வி:-பிரசார களத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

  பதில்:-அமோகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டம். நான் மற்றும் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன், அருள்மணி உள்ளிட்ட பலர் பல இடங்களுக்கு பிரசாரத்துக்காக சென்று இருக்கிறோம். முன்பு இருந்ததை விட இரட்டை இலைக்கு புது மவுசு வந்துள்ளது. காரணம் 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்ட அவஸ்தைகள் போதாதா? அ.தி.மு.க. ஆட்சி மலராதா? என்று மக்கள் ஏங்கி தவிப்பதை நாங்கள் காண்கிறோம்.

  கேள்வி:-இந்தியா கூட்டணி பற்றி உங்கள் பார்வையில்?

  பதில்:-இந்தியா கூட்டணி இல்லை அவர்கள் இந்திய கூட்டு களவாணிகள் என்று மக்கள் சொல்கிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.
  • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  சென்னை:

  சென்னையில் இன்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

  பாராளுமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் கடந்த மாதம் 24-ந்தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

  இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சென்னையில் இன்று மாலையில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். திருவள்ளூர் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

  இதன் பின்னர் வடசென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பெரவள்ளூரில் இரவு 7 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் மற்றும் முகப்பேர்-கலெக்டர் நகர் சந்திப்பில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

  மாலை 6 மணிக்கு வடசென்னை தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி, ராயபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

  • கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன்.
  • நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

  புதுச்சேரி:

  சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்தார்.

  அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று அங்கு திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

  முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நானும் மக்களில் ஒருவன் என்பதால் என் நிலைதான் அவர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மாற்றம் என்பதல்ல, இப்போது முக்கியம், நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உட்பட எல்லாவற்றையும் தற்காத்து கொள்ளும் நேரம் இது.

  கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும், தமிழன் என்பதும்தான் இன்று எனக்கு பிரதானமாக தெரி கிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  முன்னதாக கமல்ஹாசனை வரவேற்க மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு, பேரணியாக அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். ஆனால் லாஸ்பேட்டை போலீசார் தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக்காட்டி, பேரணியாக சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

  • தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும்.
  • எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல்.

  திருச்சி:

  திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் பேசியதாவது:-

  நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.

  தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

  தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் உலகம் இந்தியாவை திரும்பி பார்க்கும். இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்பதை முதன்முதலில் மக்கள் நீதி மய்யத்தில் அறிவித்தோம். அப்போது என்னென்னமோ கிண்டல் செய்தார்கள்.

  ஆனால் அதை உற்றுநோக்கி நடைமுறைப்படுத்திய ஒரு காரணத்துக்காக நான் இங்கு வந்தேன் என்று வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் என்ற திட்டம் ஏன் தமிழ்நாட்டோடு முடியணும்? இந்தியா முழுவதும் ஏன்? வரக்கூடாது. அது தான் நல்ல அரசியல், அதை செய்யுங்கள்.

  எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  • இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.
  • வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது

  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

  இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. அதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் - 2' படத்தை இயக்க தொடங்கினார்.

  இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
  தற்போது இந்தியன் -2 படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தற்போது 'இந்தியன்-2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  எனவே விரைவில் இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி அறிவிக்கபடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல்  முடிந்ததும் இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டது.

  இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. வருகிற மே -24 ந் தேதி 'இந்தியன் - 2' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.