ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல் ஆறுதல்

ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல் ஆறுதல்
Published on

நேற்று காலை வயது மூப்பின் காரணமாக பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் எம்.பி இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு மரம் நான் என்று கமல் பேசியிருந்தார்.

இந்நிலையில் ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறி உள்ளார்.

ஏ.வி. மெய்யப்பன் தொடங்கிய பழம்பெரும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் 1958ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று பல வெற்றித் தமிழ் படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com