உள்ளூர் செய்திகள்
கோப்புப் படம்

முழு ஊடரங்கில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி

Update: 2022-01-08 18:08 GMT
முழு ஊரடங்கை முன்னிட்டு, நாளை அதிகாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டிகள் தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முழு ஊரடங்கின் போது உணவகங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யலாம். மின்னணு வர்த்தக விநியோகம் மட்டுமின்றி சொந்த விநியோக முறையில் உணவகங்கள் டெலிவரி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு விநியோகத்திற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News