என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா பாதிப்பு புள்ளிவிவரம்
  X
  கொரோனா பாதிப்பு புள்ளிவிவரம்

  தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்தது -சென்னையில் மட்டும் 5098

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,39,253 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 10,978  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று 8,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 10 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 87 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.

  சென்னையில் தினசரி பாதிப்பு 5000-ஐ தாண்டி உள்ளது. 5098 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 1332 பேருக்கும், கோவையில் 585 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 309 பேருக்கும், திருவள்ளூரில் 591 பேருக்கும், திருப்பூரில் 226 பேருக்கும், வேலூரில் 243 பேருக்கும், தூத்துக்குடியில் 202 பேருக்கும், திருச்சியில் 237 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

  இன்று ஒரே நாளில் 1,525 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 10 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது.

  தடுப்பூசி போடும் பணி

  கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,843 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது. 

  தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 6 பேர் வெளிமாநிலத்தவர்கள். 
  Next Story
  ×