என் மலர்

  நீங்கள் தேடியது "Coronavirus"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரியங்கா காந்தி மீண்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • சோனியா காந்தி 3-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  புதுடெல்லி:

  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 1 மாதத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

  ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார். இந்த நிலையில் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா காந்தி மீண்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் சோனியா 3-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்த 18,053 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது.

  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  பாதிப்பு கடந்த 9-ந்தேதி 12,751 ஆக இருந்தது. மறுநாள் 10-ந்தேதி 16,047 ஆகவும், நேற்று 16,299 ஆகவும் உயர்ந்தத நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

  இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6 மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில், நாள்தோறும் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

  நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக உயர்ந்தது.

  தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்த 18,053 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,23,535 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,541 குறைவு ஆகும்.

  கொரோனா பாதிப்பால் மேலும் 49 பேர் இறந்துள்ளனர். மொத்தபலி எண்ணிக்கை 5,26,929 ஆக உயர்ந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு அனுமதி
  • 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

  புதுடெல்லி:

  கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

  12 முதல் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த மார்ச் 16-ல் தொடங்கப்பட்டது. 18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது.

  நாடு முழுவதும் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பவேக்ஸ் தடுப்பூசியைப் போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கோர்பவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

  2-வது டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் இந்த கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், நாளை முதல் அரசு மற்றும் தனியார் என அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோர்பவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்றைய நிலவரப்படி 3244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
  • அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 307 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

  சென்னை:

  தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் இருந்தது. தற்போது கொரேனா பரவல் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் உள்ளது.

  கடந்த 1-ந்தேதி நிலவரப்படி 1,359 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. தற்போது இது மேலும் வேகமாக குறைந்து வருகிறது. நேற்றைய புள்ளி விவரப்படி தமிழகத்தில் 1000-க்கும் கீழ் நோய் பாதிப்பு குறைந்து இருக்கிறது.

  927 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் சென்னை நகரில் நோய் குறைந்து பரவல் வேகமாக சரிந்து உள்ளது.

  கடந்த 1-ந் தேதி 309 ஆக இருந்த பாதிப்பு தற்போது 200-க்கும் கீழ் குறைந்து இருக்கிறது.

  நேற்று 186 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நோய் பரவல் குறைந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

  சென்னையில் கடந்த 1-ந் தேதி நோய் பாதிப்பு 309 பேர், 2-ந் தேதி 298 பேர், 3-ந் தேதி 283 பேர், 4-ந் தேதி 268 பேர், 5-ந் தேதி 247 பேர், 6-ந் தேதி 239 பேர், 7-ந் தேதி 234 பேர், 8-ந் தேதி 208 பேர், 9-ந் தேதி 202 பேர், 10-ந் தேதி 186 பேராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நேற்றைய நிலவரப்படி 3244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

  அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 307 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மற்ற மண்ட லங்களில் சிகிச்சையில் இருப்பவர்கள் விவரம் வருமாறு:-

  திருவொற்றியூர்-145

  மணலி-138

  மாதவரம்-170

  தண்டையார்பேட்டை-168

  ராயபுரம்-181

  திரு.வி.க.நகர்-214

  அம்பத்தூர்-207

  அண்ணநகர்-230

  தேனாம்பேட்டை-293

  கோடம்பாக்கம்-260

  வளசரவாக்கம்-228

  ஆலந்தூர்-214

  அடையாறு-307

  பெருங்குடி-255

  சோழிங்கநல்லூர்-227.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம்.
  • நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு காரணம்.

  சியோல்:

  உலகை அச்சுறுத்திய கொரோனா, வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

  வடகொரியாவில் கொரோனா நோயினை அங்குள்ள சுகாதாரத்துறையினர், சாதாரண காய்ச்சல் என்றே பதிவு செய்தனர். இதனால் இங்கு கொரோனா இறப்பு குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.

  இந்நிலையில் கடந்த மே மாதம் இங்கு ஒமைக்ரான் பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தலைநகர் பியோங்யாங்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

  கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த வடகொரியாவின் சுகாதாரத்துறையினர், நோய் தடுப்பு விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

  இதில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

  வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிராக நடந்த போரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்கு காரணம்.

  இதற்கு காரணமானவர்களை பாராட்டுகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மேலும் அவர் சுகாதார பணியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்து கொண்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,431 பேர் மீண்டு வீடு திரும்பினர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 41 ஆக உயர்ந்தது.

  புதுடெல்லி:

  கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

  அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

  நேற்று பாதிப்பு 16,047 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,146, மகாராஷ்டிராவில் 1,847, கர்நாடகாவில் 1,680, கேரளாவில் 1,317, அரியானாவில் 1,145 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

  நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 6 ஆயிரத்து 996 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,431 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 41 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,25,076 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,185 குறைவு ஆகும்.

  கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 53 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,879ஆக உயர்ந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,539 பேர் நலம் பெற்றுள்ளனர்.
  • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரத்து 610 ஆக உயர்ந்தது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 12,751 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

  மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,047 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

  இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 1,782, கர்நாடகாவில் 1,608 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

  நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரத்து 697 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,539 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரத்து 610 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,28,261 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சிசை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,546 குறைவு ஆகும்.

  தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 54 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,826ஆக உயர்ந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் நேபாளம் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

  காத்மாண்டு:

  அண்டை நாடான நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 4 சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நேபாளம் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

  கொரோனா பாதித்த 4 இந்தியர்களையும் சொந்த நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16,412 பேர் மீண்டுள்ளனர்.

  புதுடெல்லி:

  நாட்டில் புதிதாக 12,751 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

  கடந்த 5-ந் தேதி பாதிப்பு 20,551 ஆக இருந்தது. மறுநாள் 19,406, 7-ந் தேதி 18,738, நேற்று 16,167 ஆக இருந்த நிலையில் 4-வது நாளாக இன்றும் சரிந்தது.

  இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 16,412 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,31,807 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,703 குறைவு ஆகும்.

  தொற்று பாதிப்பால் மேலும் 42 பேர் இறந்துள்ளனர். இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,26,772 ஆக உயர்ந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,549 பேர் மீண்டுள்ளனர்.
  • கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 659 ஆக உயர்ந்தது.

  புதுடெல்லி:

  கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,167 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

  இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஜனவரி 22-ந் தேதிக்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும்.

  அங்கு நேற்று 16,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 14.97 ஆக உயர்ந்துள்ளது.

  கர்நாடகாவில் 1,837, மகாராஷ்டிரத்தில் 1,812, கேரளாவில் 1,158, தமிழ்நாட்டில் 1,057 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 61 ஆயிரத்து 899 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,549 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 659 ஆக உயர்ந்தது.

  தற்போது 1,35,510 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 577 அதிகம் ஆகும்.

  தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 41 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,730 ஆக உயர்ந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன்.
  • இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று மீண்டும் கண்டறியப்பட்டது.

  வாஷிங்டன்:

  அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜூலை 21-ம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

  இதற்கிடையே அதிபர் ஜோ பைடன் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டார் என அதிபரின் டாக்டர் தெரிவித்தார். ஜூலை 31-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று மீண்டும் உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டார்.

  இதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட அதிபர் பைடன் கண்காணிப்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

  இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இன்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print