என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
    • மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.

    சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2019-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    * கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல பெயர்களில் உலா வருகிறது.

    * இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வீரியம் இல்லாதது.

    * முகக்கவசம் அணிவது போன்ற வழக்கமான வழிமுறைகளையே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * இணை நோய் இருப்பவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.

    * பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது எப்போதும் உள்ள நடைமுறை.

    * தமிழ்நாட்டில் போதுமான அளவு மருந்துகள் தயார்நிலையில் உள்ளன.

    * புனேவுக்கு 19 மாதிரிகள் அனுப்பி வைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

    * வீரியம் குறைந்த பாதிப்பே இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    * பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அறிவுறுத்தல்தான்.

    * 2, 3 நாள் இருமல், காய்ச்சல், சளி என்பதுடன் பாதிப்பு சரியாகி விடும். மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    * கொரோனா பாதிப்பு குறித்து யாரும் வதந்தி பரப்பக்கூடாது.

    * மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது, வதந்தி பரப்புவது சமூகத்திற்கு இழைக்கப்படும் கேடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×