search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Health Department"

    • மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
    • கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    சென்னை:

    சென்னையில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் சில இடங்களில் மழைநீா் தேங்கி நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவமழை காலத்தில் வெள்ளநீா் தேங்காத வகையில் கழிவுகளை அகற்றுவது அவசியம். மழை நீா் தேக்க மடைந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை விரிவாக மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்குமாறும், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    வயிற்றுப் போக்கு, உணவு ஒவ்வாமை பாதிப்புகள், காலரா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட தனியாா், அரசு மருத்து வமனைகள் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
    • ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    பொது சுகாதாரத்துறை ஆரம்பிக்கப்பட்டு தற்போது 100வது ஆண்டு நடைபெறுவதால், சுகாதாரத் துறை சார்பில் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த வாரத்தில் தினசரி ஒரு நிகழ்வாக மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கபடி போட்டி, இசை நாற்காலி, பேச்சு போட்டி, கோலப்போட்டி, சதுரங்க போட்டி, ஆரோக்கியமான குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி மற்றும் மருத்துவர் கார்த்திகா, சுகாதார மேற்பார்வை யாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், வேல்முருகன் உட்பட வெள்ளகோவில், கம்பளியம்பட்டி, முத்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×