செய்திகள்
திருமாவளவன்

நான் சுட்டிக்காட்டியது தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது- திருமாவளவன் பேச்சு

Published On 2020-10-26 06:52 GMT   |   Update On 2020-10-26 06:52 GMT
மனுதர்ம நூலில் குறிப்பிட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன் ஆனால் தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

அரக்கோணம்:

அரக்கோணத்தில் தம்மபெருவிழா நடந்தது.இதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பவுத்தம் எழுகிறது என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மனுதர்ம நூலில் குறிப்பிட்டதை தான் நான் சுட்டிக்காட்டினேன் ஆனால் தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது. பா.ஜ.க. மகளிர் அமைப்பு சார்பில் எனக்கு எதிராக நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக நம் கட்சியை சார்ந்த பெண்கள் யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் என்றார்.

இதை தொடர்ந்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

நீட் தேர்வில் இட ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு என 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தாமல் ஏன் 7.5 சதவீதம் என அமைத்தார்கள் என முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தரப்பில் பல்வேறு சுவரொட்டிகள் தி.மு.க.வுக்கு எதிராக வெளியிடப்படுகிறது. இது முதல்-அமைச்சருக்கு தெரிந்தே நடக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.

தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு இருமொழிக் கொள்கையை ஏற்கிறதா அல்லது மும்மொழி கொள்கையை ஏற்கிறதா என்பது குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி அனைத்து பொதுமக்களுக்கும் சமமானது. இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். தொற்று கடுமையாக பரவிக் கொண்டு வரும் நிலையில் அரசின் அழுத்தத்தின் காரணமாக கொரோனா தொற்று குறைத்து காட்டப்படுகிறது.

தமிழகத்தில் வரும் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணி தான் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News